தெஹிவளையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்: சகோதரர்களான இரு சிறுவர்கள் உயிரிழப்பு
தெஹிவளை, கவுடான, சிறிசங்கபோ வீதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 10 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் காயமடைந்த 10 வயதுச் சிறுவன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அவரது 14 வயதுடைய சகோதரரும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்ததாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.
அவர்களது 52 வயதுடைய தந்தையும் மேலும் இரண்டு சகோதரர்களும் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர்களின் தந்தை தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைக்குண்டுத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






.jpg)


.webp)


.jpg)
