கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய செயற்பட்ட பொலிஸ் குழுவொன்று, ஆடியம்பலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கழற்றிக்கொண்டிருந்த நபர் ஒருவரைப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது.
இதன்போது அவரிடமிருந்து 11 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் கழற்றிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி வெயாங்கொட பகுதியில் திருடப்பட்ட ஒன்று எனத் தெரியவந்துள்ளது.
இத்திருட்டுக்கு உடந்தையாக இருந்த மற்றைய சந்தேகநபரையும் பின்னர் சீதுவை பகுதியில் வைத்து பொலிஸார் கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 25 வயதுடைய ஆடியம்பலம் மற்றும் சீதுவை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்களிடம் நடத்திய மேலதிக விசாரணைகளின் போது, கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற இரு செப்பு கம்பித் திருட்டுகள், ஒரு கைபேசித் திருட்டு மற்றும் சீதுவை பகுதியில் இடம்பெற்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


.jpg)



.jpg)


.webp)


.jpg)
