பன்னேகமுவ பகுதியில் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பதக்கத்தை விற்பனை செய்ய முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டு, ரூ.100,000 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
திஸ்ஸமஹாராமவில் உள்ள நகைக்கடை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பதக்கம் மற்றும் வளையல், கரும் பவளத்தால் செய்யப்பட்ட 9 பதக்கங்கள், சிப்பிகளால் செய்யப்பட்ட பதக்கங்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான சந்தேகநபர் ரூ.500,000 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இரு வழக்குகளும் ஒக்டோபர் 2ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.






.jpg)




.jpg)

