கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, தெமட்டகொடை மற்றும் தொட்டலங்க பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடைய பெண்கள் ஆவர்.
இவர்கள் இன்று புதன்கிழமை (09) காலை 10:55 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையின் UL-403 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த 2 பயணப் பைகளுக்குள், 5 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 5 கிலோகிராம் 372 கிராம் 'குஷ்' போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், கைது செய்யப்பட்ட இரு பெண்களும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


.jpg)


.jpg)




.webp)


