
இலங்கையின் படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் (ACPOSL), திருமணங்கள், தனியார் நிகழ்வுகள் மற்றும் DJ நிகழ்ச்சிகளுக்கான இசை உரிமம் பெறும் நடைமுறையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
திருமணங்கள் மற்றும் பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட தனியார் நிகழ்வுகளுக்கு இசை உரிமம் பெறும் நடைமுறையை தொடர்வதா என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.
இசை உரிம நடைமுறையில் நிரந்தர மாற்றங்களை மேற்கொள்வதற்கு சங்க உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதல் அவசியம் என்றும், பணிப்பாளர் சபையால் தனித்து அத்தகைய தீர்மானத்தை எடுக்க முடியாது என்றும் ACPOSL தெரிவித்துள்ளது.
மேலும், நிகழ்வுகளில் இசை வழங்கும் DJ-க்களுக்கான உரிம நடைமுறையும் சர்வதேச இசை உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, ACPOSL-இன் இசை உரிம நடைமுறை நிகழ்வு இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் இசையை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கே பொருந்தும் என்றும், வீடுகளில் நடைபெறும் தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு இது பொருந்தாது என்றும் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.




.jpg)





.jpg)

