மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கடந்த 07 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை இன்று (11) வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அவரை இன்றையதினம் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, 02 இலட்சம் ரூபா வீதம் இரு சரீரப் பிணையில் கடும்நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்துக்குச் சென்று, கடந்த 31ஆம் திகதி அங்கிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, அலுவலகத்தில் மேசையை உடைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.






.jpg)


.webp)


.jpg)
