வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பீடி இலை மூடைகள் கைப்பற்றல்: பொலிஸார் விசாரணை!



துங்கல்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டிபன பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதி ஒன்றை தூங்கல்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று புதன்கிழமை (30) கிடைத்தத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, வீடொன்றைப் பரிசோதித்த பொலிஸார் 442 கிலோ 400 கிராம் எடையுள்ள (12 மூடைகள்) பீடி இலைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.

மேலும், தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக தூங்கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.