
கொழும்பு 10, மாளிகாவத்தை பகுதியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், 16 வயதுடைய சிறுவன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாளிகாவத்தையில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றுக்கு அருகில் இரவு 10:30 மணியளவில் காதல் விவகாரம் தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக்குத்தாக மாறியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இம்மோதலில் படுகாயமடைந்த மூவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், மாளிகாவத்தையைச் சேர்ந்த 21 வயதுடைய இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
காயமடைந்த 16 வயதுடைய மற்றைய சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவசர சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், இத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.





.jpg)
.jpg)





