இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள கடன் சுமை மற்றும் அதற்கான தீர்வுகள், சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையின்படி கடன் பொறுப்புக்களை நிர்வகிப்பதில் அரசாங்கத்துக்கு போதுமான நிதி ஸ்திரத்தன்மை காணப்படுகிறது. சரியான நிதி ஒழுக்கம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் நாட்டின் வருவாய் அதிகரிக்கப்பட்டு, கடன் மீளச் செலுத்துவதற்கான திட்டமிட்ட நடவடிக்கைள் வெற்றிகரகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அல்லது முதலீட்டாளர்கள் அச்சமடைய தேவையில்லை.
நாட்டின் உள்நாட்டு கையிருப்பு மற்றும் உள்நாட்டு பொருளாதார நிலைமைகள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளதுடன், முறையான பொருளாதார நிர்வாகத்தின் காரணமாக எதிர்காலத்தில் கடன் செலுத்தல் சார்ந்த எவ்வித நெருக்கடிகளும் ஏற்பட வாய்ப்பில்லை.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களுக்கும், ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ள தீர்மானங்களுக்கும் இடையே எவ்வித எதிர்மறையான தாக்கமும் ஏற்படாது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான நிபந்தனைகளாக நிதி ஒழுக்கம் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பிலேயே அமைந்துள்ளன. ஊழல் எதிர்ப்பு தொடர்பான மதிப்பீடுகளில் அடிப்படையில் சட்டத் திருத்தங்கள் குறித்து கருத்து முன்வைக்கப்பட்ட போதிலும், அது தற்போதைய IMF திட்டத்தை பாதிக்காது. தனிநபர் ஒருவரின் தனியுரிமைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அல்லது ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சொத்து அறிவித்தல் படிவங்களை பயன்படுத்துவதை இந்த திருத்தத்தின் நோக்கமாகும். இந்த குறிப்பிட்ட மாற்றம் அரச அதிகாரிகளின் பாதுகாப்பும் வகையில் கொண்டுவரப்பட்டதே தவிர ஜனாதிபதி அல்லது அரசியல்வாதிகளுக்கு இது பொருந்தாது.
அரச அதிகாரிகள் மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த சந்தேகங்கள் காணப்படுமெனின் பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் தேவையான தகவல்களை பெற்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேரடியாக புகார் அளிக்க முடியும். அவ்வாறு செய்யாமல் உத்தியோகப்பூர்வ விசாரணைகளுக்கு முன்னர் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் ஊடாக அதிகாரிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது அரச நிர்வாகத்தை சீர்குலைக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இது மக்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு தண்டனை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இத்திருத்தம் நாட்டின் நிர்வாக கட்டமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். ஊழல் எதிர்ப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட இது அவசியமான ஒன்றாகும். தற்போதைய எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான விவாதங்களை முன்னெடுப்பதற்கு பதிலாக வீணான விமர்சனங்களை மட்டுமே முன்வைக்கிறது. இது வெறும் அரசியல் விளையாட்டு அல்ல மாறாக நீண்டகால பலன்களை தரும் ஒரு முயற்சியாகும்.






.jpg)
.jpg)





