47 ஆயிரத்துக்கும் அதிகமான கஞ்சா செடிகள் பறிமுதல்: 53 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது!


ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொமவல மவ்ஆர பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, அரை ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பாரிய கஞ்சா தோட்டம் ஒன்றை வாலாண மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின் போது, குறித்த காணியில் பயிரிடப்பட்டிருந்த 47,150 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைக்காக ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் உடகம பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபராவார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.