அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் 40,000க்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதோடு கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பின் மூன்றாவது கட்டம் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் வழங்கப்படவுள்ள நிலையில், அதன் பின்னர் சுமார் 10,000 ஆசிரியர்கள் ஓய்வு பெறக்கூடும்.
பொதுவாக ஆண்டுதோறும் சுமார் 7,000 ஆசிரியர்கள் ஓய்வு பெறும் நிலையில், இந்த ஆண்டு மேலும் 3,000 பேர் ஓய்வு பெறக்கூடும் என்றும், இதனால் மொத்த ஆசிரியர் பற்றாக்குறை 50,000ஐ தாண்டும் நிலை ஏற்படலாம். இதனிடையே, 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான ஜூன் மாதம் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு 173,000 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்ததுடன், 163,000 பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். எனினும், இதுவரை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை.
மேலும், 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு 69,000 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டியுள்ளதால், இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை 2027 மார்ச் மாதத்திற்கு முன்னரே நிறைவடைய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






.jpg)
.jpg)





