புதையல் அகழ்வில் ஈடுபட்ட 59 வயதுடைய நபர் உபகரணங்களுடன் சிக்கினார்!


கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லவெவ பகுதியில் புதையல் தோண்டிய நபர் ஒருவர் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை (30) கிடைத்தத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ரன்பத்வில பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.