சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் வரிப் கொள்கைக்கும், வேகமாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவிற்கும் எதிராக இந்தக் கண்டனப் பேரணி நேற்று (3) பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொரளை கெம்பல் மைதானத்திற்கு அருகில் ஆரம்பமான இந்த எதிர்ப்புப் பேரணி, புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமான முறையில் மக்களைக் ஒன்றிணைத்தமை மற்றும் உரிய அனுமதிப் பத்திரத்தைப் பெறாமல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளன.




.jpg)








.jpg)