கல்கிஸ்ஸையில் லொறி மோதி சைக்கிளில் பயணித்த 67 வயது முதியவர் உயிரிழப்பு – சாரதி கைது



கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொளுமடம - பொருபன வீதியில், பொருபன இரும்பு பாலத்திற்கு அருகில் பொருபன நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற இவ்விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள் செலுத்துனர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய முதியவராவார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.