சீகிரியவில் காட்டு யானை தாக்கி 77 வயது முதியவர் உயிரிழப்பு



சீகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுடாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாகக் சீகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (02) அதிகாலை வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கிம்பிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவராவார்.

உயிரிழந்தவர் தனது வீட்டிலிருந்து வெளியே வந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.