
இலங்கையின் சட்டக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சட்டத்துறையின் மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை' உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் செனட் மாளிகையில் அண்மையில் நடைபெற்ற விழாவில், மூத்த கல்வியாளர்கள், சட்டத்துறையின் முன்னணி ஆளுமைகள் மற்றும் சிவில் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த அறக்கட்டளை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போல் ரத்நாயக்க அசோசியேட்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட அறக்கட்டளைப் பத்திரத்தில், அறங்காவலர்களாகச் செயல்படும் அறக்கட்டளை நிறுவுனரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக, சட்டப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சம்பத் புஞ்சிஹேவா, இலங்கை சட்டக் கல்லூரியின் முதல்வர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரஷாந்த லால் டி அல்விஸ் மற்றும் பேராசிரியர் பீரிஸின் மகளான வைத்தியர் ஆமந்தி பண்டாரசேன ஆகியோர் கையெழுத்திட்டனர்.



.jpg)








