வலுசக்தி சந்தையில் வலுவான அரச பங்கைப் பேணி, மக்களுக்கு செயற்திறனாக சேவையாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதனை நிறைவேற்றுவதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமான முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது. தற்பொழுது இலங்கையில் வலுவான மற்றும் மக்களுக்குச் சுமையாக இல்லாத வலுசக்திச் சந்தையொன்று கட்டியெழுப்பப்பட்டு வருகிறது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஜெட் எ-1 குழாய் கட்டமைப்பு மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்திற்கு உரிய இரண்டு புதிய எண்ணெய் தாங்கி சேமிப்புத் தொகுதிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் வெள்ளிக்கிழமை (02) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
வலுசக்தித் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் தேசிய இலக்கிற்கு இணையாக, விமான எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், விநியோகச் செலவைக் குறைத்தல் மற்றும் எதிர்கால விமான எரிபொருள் தேவைக்கு அவசியமான கொள்ளளவு வசதிகளை அதிகரித்தல் என்பவற்றுக்காக இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இந்நாட்டு விமான சேவைகள் துறையின் எதிர்காலத் தேவையை வெற்றிகரமாக நிவர்த்தி செய்தல், விமான எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, முத்துராஜவெல மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில், விமான எரிபொருள் விநியோகத்திற்கு மாத்திரம் ஒதுக்கப்பட்ட விசேட குழாய் கட்டமைப்பும் அதனுடன் இணைக்கப்பட்ட தாங்கித் தொகுதியும் நிர்மாணிக்கப்படுகின்றன.
92,000 கன மீற்றர் மொத்த கொள்ளளவு கொண்ட ஐந்து புதிய ஜெட் ஏ-1 எரிபொருள் தாங்கிகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதுடன், இரண்டு பெரிய ஜெட் ஏ-1 தாங்கிகள் (ஒவ்வொன்றும் 30,000 கன மீட்டர் வீதம்), இரண்டு நடுத்தர அளவிலான தாங்கிகள் (ஒவ்வொன்றும் 15,000 கன மீட்டர் வீதம்) மற்றும் 2,000 கன மீட்டர் கொண்ட மேலதிக தாங்கியும் இதில் உள்ளடங்கும். முத்துராஜவெல தாங்கி வளாகத்திலிருந்து 21 கிலோமீட்டர் நீளமும் 10 அங்குல விட்டமும் கொண்ட நிலத்தடி குழாய் மூலம் விமான நிலையத்திற்கு எரிபொருள் விநியோகக் குழாய் கட்டமைப்பு இணைக்கப்படும். இத்திட்டம் 30 மாதங்களில் நிறைவுசெய்யப்படவுள்ளது.
மேலும், பெற்றோலியத் தொழில்துறையின் சேமிப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன சேமிப்பு முனைய நிறுவனத்தால் முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய சேமிப்புத் தாங்கிகளை அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. இது நிறைவடைந்ததும், தலா 15,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 2 தாங்கிகள் மற்றும் 10,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 1 தாங்கி என மூன்று தாங்கிகள் கொண்ட தொகுதியின் மூலம் 40,000 கன மீட்டர் மேலதிக மொத்த சேமிப்புக் கொள்ளளவு வழங்கப்படும்.
இதன் மூலம் முனையத்தின் பெற்றோலிய சேமிப்புத் திறன்கள் மேலும் மேம்படுத்தப்படுவதுடன், நாட்டின் பெற்றோலிய உட்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் இது உறுதுணையாக அமையும். இத்திட்டம் 18 மாத ஒப்பந்தக் காலத்தைக் கொண்டதுடன், இது 2028 ஏப்ரல் மாதத்தில் நிறைவடையவுள்ளது.
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் செயற்பாட்டு திறன் ஆகியவற்றை உறுதிசெய்து, தொடர்புடைய சர்வதேச தரநிலைகள் மற்றும் தொழிற்துறையில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க இந்தத் தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இந்த மேலதிக சேமிப்புத் திறனானது, நாட்டின் எரிபொருள் கையிருப்புகளை வலுப்படுத்தவும், செயற்பாட்டு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், நாட்டில் அதிகரித்து வரும் வலுசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எரிபொருள் தயாரிப்புகளை நம்பகத்தன்மையுடனும் தடையின்றியும் விநியோகிக்க உதவுகிறது என்றார்

.jpg)

.jpg)