அட்டனில் இருந்து போகவந்தலாவை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, போகவந்தலாவை பகுதியில் இன்று (01) வியாழக்கிழமை காலை வீதியில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த பெண் ஆகிய இருவரே படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த சாரதியும் பெண்ணும் உடனடியாக போகவந்தலாவை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதிக வேகத்தினால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி கவிழ்ந்ததே விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாகப் போகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.






.jpg)
.jpg)





