![]() |
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் அண்மையில் பிறந்த நைல் நீர்யானைக் குட்டிக்கு ‘மோமோ’ (Momo) என உத்தியோகபூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (01) தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நடைபெற்ற விசேட நிகழ்வின்போது இந்தப் பெயர் அறிவிக்கப்பட்டது.
நீர்யானைக் குட்டிக்கு பெயர் தெரிவு செய்வதற்காக சிறுவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிக்கு சுமார் 1,000 பெயர்கள் முன்மொழியப்பட்டதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவற்றில் சிறுமி அவந்தா தமாரி முன்மொழிந்த ‘மோமோ’ என்ற பெயரை அதிகாரிகள் அடங்கிய குழு தெரிவு செய்துள்ளது.
வெற்றிபெற்ற சிறுமிக்கு சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி விசேட பரிசுகளையும் வழங்கி வைத்தார்.
நீர்யானைக் குட்டியின் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் விலங்கு பராமரிப்பாளர்கள், கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கும் திணைக்களம் நன்றி தெரிவித்துள்ளது.




.jpg)








