தலவாக்கலையில் மின்னல் தாக்கி கிறிஸ்தவ மதகுரு உயிரிழப்பு



தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் இன்று சனிக்கிழமை (03) மின்னல் தாக்கியதில் நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க கிறிஸ்தவ மதகுரு ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மின்னல் தாக்கிய உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.