
"அநியாய வரிகளை நீக்கு...! வாழ்க்கைச் சுமையைக் குறைத்திடு!" எனும் கோரிக்கைகளை முன்வைத்து, மக்கள் போராட்ட இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்புக் கண்டனப் பேரணியொன்று இன்று சனிக்கிழமை (03) கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு பொரளை கெம்பல் மைதான வளாகத்தில் இருந்து நண்பகல் வேளையில் ஆரம்பமான இந்தப் பேரணி, கோட்டைப் பகுதியை நோக்கி நகர்ந்தது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வரிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் முன்னணி சோசலிசக் கட்சி, மக்கள் போராட்ட முன்னணி, சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் உள்ளிட்ட பல வெகுஜன அமைப்புகளும் சிவில் சமூகக் கூட்டமைப்புகளும் திரளாகப் பங்கேற்றிருந்தன.



.jpg)








