நவம்பர் 30ஆம் திகதி ஆசிரியர் – அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்


2027 வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர் - அதிபர்களின் பிரச்சினைகளுக்குக் கவனம் செலுத்தாமையினால் எதிர்வரும் 30ஆம் திகதி சுகயீன விடுமுறைத் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இன்று (21) கொழும்பில் இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பின் போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,

"தற்போதைய பொருளாதாரச் சூழலில், ஆசிரியர் - அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

எனவே, நாங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்.

எதிர்வரும் முதலாம் திகதி வரவு செலவுத் திட்டத்தின் கல்விக்கான ஒதுக்கீடு குறித்துப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

அதனைக் கருத்திற்கொண்டே நாம் 30ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். எனவே, வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.