
மாத்தளை பகுதியில் 05 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் இருவர் மாத்தளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுவர் பூங்காவிற்குப் பின்புறமுள்ள வீதியில் நேற்று சனிக்கிழமை (21) இரவு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 43 மற்றும் 47 வயதுடையவர்களாவர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் மாத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.












