
மஞ்சள் நிற வெற்று எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல நிற வர்ணம் பூசி, அவற்றை 'லிட்ரோ' எரிவாயு சிலிண்டர்களைப் போன்று மாற்றி மோசடியில் ஈடுபட்ட மூவர் கொட்டதெனியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
புதிதாக வர்ணம் பூசப்பட்ட சிலிண்டர்கள் குறித்து பொதுமக்களுக்குச் சந்தேகம் ஏற்படாத வண்ணம், அவை ஏற்கனவே பாவனையில் இருந்த சிலிண்டர்களைப் போன்று தோற்றமளிப்பதற்காக அவற்றின் மீது உணவுத் துகள்களை ஒட்டிச் சந்தேகநபர்கள் இம்மோசடியில் ஈடுபட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொட்டதெனியாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.












