
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று சனிக்கிழமை (21) இரவு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக, திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி அலுவலகத்திற்குச் செல்ல விரும்பும் பொதுமக்கள், முன்னரே நேரத்தை ஒதுக்கிக்கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், நேர ஒதுக்கீட்டுக் கட்டமைப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், https://dmtappointments.dmt.gov.lk/ என்ற இணையத்தளத்தின் ஊடாக நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.












