200 தேள்களுடன் சீனப் பிரஜை கைது!



200 தேள்களைக் கடத்த முயற்சித்த சீனப்பிரஜை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் குவென்சூ நகர் நோக்கி பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் சந்தேக நபர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் தமது பயணப் பொதியில் வைத்து தேள்களை உயிருடன் கொண்டுசெல்ல முயற்சித்துள்ளார்.

தேள்களை இலங்கையிலிருந்து வௌிநாடுகளுக்குக் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுங்கம் கூறியுள்ளது.