(சித்தா) கல்முனை கல்வி வலயத்தைச் சேர்ந்த கல்/இராமகிருஸ்ண வித்தியாலயத்தின் அதிபர் திரு.சி.புவிராஜ் தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 65 பேர் அடங்கிய குழுவினர் பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கு கல்விச் சுற்றுலாவினை மேற் கொண்டனர்.
இவர்கள் மட்/மண்டூர் 13 விக்கிணேஸ்வரா வித்தியாலயம். மட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயம், மட்/ஆணைகட்டியவெளி நாமகள் வித்தியாலயம் என்பவற்றைத் தரிசித்து இப் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல், பாடசாலை நிருவாகக் கடமைகள், பாடசாலைக் கவின் நிலை என்பவற்றை அவதானித்ததுடன் இவற்றை நடைமுறைப்படுத்தலில் ஏற்படும் சவால்கள் பற்றி அவ்வவ் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினர்.












.jpeg)



