(வரதன்) மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் சர்வதேச கொரிய அமைப்பின் பங்களிப்புடன் 4 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆய்வுகூடம் 14.10.2014 செவ்வாய்க்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக தொழிநுட்பகல்வி பயிற்சித்திணைக்களகத்தின் பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ. றஞ்ஜித், கொய்காஅமைப்பின் பணிப்பாளர் சோ குயுசான், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ் சார்ள்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கணணிகூடம் தொழிநுட்பக்கல்லூரியின் பாடவிதானத்தின் தேவையினை ஈடு செய்யும் கொள்ளளவினைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இக்கணணிக்கூடத்தின் உதவியினால் எதிர்வரும் 2015 ம் ஆண்டில் ஆரம்பக்கப்படவுள்ள தகவல் தொழிநுட்ப கற்கை நெறியானது(ICT) தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மூலம் இரண்டு கற்கை நெறிகள் ஆரம்பக்கப்படவுள்ளதாக தொழிநுட்பகல்லூரி அதிபர் ரி.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
எதிர்வரும் 2015 ஆண்டு 30ற்கு மேற்பட்ட கற்கை நெறிகள் இலவசமாக கற்பிக்கப்படவுள்ளது.மாணவர்களின் வருமானத்தைப் பொறுத்து மாதமொன்றுக்கு ருபா 1000/= உதவியும், 65% மானியத்துடன் பருவகாலச் சீட்டும் வழங்கப்படும் என தொழிநுட்பகல்லூரி அதிபர் ரி.ரவிச்சந்திரன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
தொழில் தேடலில் மாணவர்கள் முகம்கொடுக்கும் சவாலை எதிர்கொள்வதற்காக மாணவர்களிடையே தகவல் தொடர்பு தொழில்நுட்பத்திறனை வளர்க்கும் நோக்கில் இந்த் ஆய்வுகூடம் திறக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஜே.ஏ.ரஞ்சித் தெரிவித்தார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4











.jpg)