(சுரேஸ்)
மனிதனாக பிறந்த அனைவருக்கும் உளரீதியானஏற்றத் தாழ்வுகள் இருப்பது வழமை அதனை நிவர்த்திசெய்யும் செயற்பாடுகளில் ஊக்கப்படுத்துனர்கள் பெரிதும் பங்கு ஏற்கின்றனர் அதிலும் மாற்றுத்திறனாளிகளாக வாழ்கின்றவர்களது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பலமாற்றங்களை வளர்ந்து ஊக்கப்படுத்தும் நோக்கில் ஈ.யூ நிதியுதவியில் கன்டிகப்மற்றும் கமிட் அமைப்புக்கள் நடைமுறைப்படுத்தும ;செயற்திட்டத்தின் சித்தாண்டி,கிரான் கிராமத்தில் வாழும் யுத்தத்தினாலும் பிறப்பினாலும் பாதிப்பிற்குள்ளான வலதுகுறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உள ஆற்றுப்படுத்தல் பயிற்சி கமிட் அமைப்பின் திட்டஉத்தியோகத்தர் எம்.ஜெயகுமார் தலைமையில் சத்துருகொண்டான் சர்வோதயபயிற்சிநிலையத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சியின் போது உளஆற்றுப்படுத்தல் மற்றும் தொழில் வழிகாட்டல் உளவளத்துறையின் பயிற்று விப்பாளர்களானஅ.ஜெயநாதன்; கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்க்கையின் முன்னேற வேண்டிய வளங்கள் மற்றும் சமூகத்தின் மத்தியில் எவ்வாரான சவால்களை எதிர்நோக்கி வெற்றி கொள்ளவேண்டும் வலதுகுறைவின் தடைகள் அதன் அகவளம்,புறவளம் என்பது பற்றிபயிற்றுவிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











.jpeg)



