மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வு நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் கொண்டாடப்படுகின்றது. இந் நிகழ்வு இன்று 4ஆம் திகதி காலை மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்திலும் நிகழ்த்தப்பட்டது.

மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு  அவர்களால் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேசியகொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்கள் மத்தியில் சுதந்திர தினம், அரச அலுவலர்களின் கடமைகள் தொடர்பில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு உரையாற்றினார்.

இன்றைய தினம் பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாலர் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் செயலக வளாகத்தில் சிரமதானப் பணியும் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.