
(க.சரவணன்)
மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை பாடசாலை மைதானம் மற்றும் அப்பகுதி 57 பேருடைய குடியிருப்பு காணிகள் அவர்களுடையது அதனை அத்துமீறி அபகித்தவர்களுக்க எதிராக நீதிமன்றம் ஊடாக தீர்வு பெறுவதாக நேற்று மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை முறாவோடை பாடசாலைக்க சொந்தமான மைதான காணியை அத்துமீறி அபகரித்துள்ள இடத்திற்கு மட்டக்களப்பு மங்களராம விகாரை விகாரதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரர் சகிதம் பொதுமக்கள் வேலியை அகற்ற முற்பட்ட சர்ச்யையடுத்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் விசேட கூட்டம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
இவ் கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், அனுரா திஸநாயக்கா . மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் கீர்தி ரத்தின , கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் ரி.ரவி. மங்களராம விகாரை விகாரதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரர் உட்பட பாடசாலை அதிபர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கடந்தகால யுத்தத்தினால் முற்று முழுதாக இப் பாடசாலை மற்றும் ஆவணங்கள் அழிக்கப்பட்டது இதன் பிறகு இப் பாடசாலைக்கான ஆவணங்களை பிரதேச செயலகத்திடம் கோரியிருந்தோம் அப்போது இது பாடசாலைக்கு உரிய காணி என பிரதேச செயலகம் அறிவித்திருந்த நிலையில் கடந்த 2016 ம் ஆண்டு 7 ம் மாதம் மைதானத்திற்குள் அத்துமீறி நிலத்தை ஆக்கிரமித்தனர்.
இது தொடர்பாக அன்றைய தினம் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தோம்பொலிசார் உரியநடவடிக்கை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து கிழக்கு மாகாண காணி ஆணையாளர், அனுரா திஸநாயக்கா அரசகாணி எனவும் இதனை முறாவோடை சக்தி வித்தியாலய பாடசாலை மைதானத்திற்கா கடந்த 07-11-2016 ம் ஆண்டு கையளித்துள்ளதாகவும் பாடசாலைக்கு சொந்தமான காணியை அத்துமீறி அபகித்தவர்களுக்கு எதிராக நாங்கள் தலையிடமுடியாது இதனை கல்வி திணைக்களம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்ததுடன் கிழக்கு மாகாண கல்வி செயலாளருடன் தொடர்பு கொண்டு வியாழக்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதாகவும் அதனூடாக தீர்வு பெற்றுக் கொள்வதாகவும் தீர்வு வரும் வரைக்கும் பொலிஸ் காவல் கடமையில் ஈடுபடுவதாகவும் காணியை அபகரித்தவர்கள் புதிதாக கட்டிடமோ அல்லது எந்தவிதமான புனர் நிர்மாண வேலைகளோ செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அப்பகுதியில்ல் 57 தமிழ் மக்களுக்கு உரிய காணிகள் அபகரிப்பு தொடர்பாக ஆராயப்பட்டது இதன் போது கோரளைப்பற்று மீராவோடை தமிழ் கிராமத்தில் வேம்பு என்று அழைக்கப்படும் நிலஅளவையாளரின் வரைபடத்தின் கீழ் தலா ஒவ்வொருவருக்கம் அரை ஏக்கர் காணி வீதம் 57 தமிழ் மக்களுக்கு ஜெய பூமி உறுதிகள்; 464 ஆத்தியாயமான காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா கையெழுத்திட்டு 2002 ம் ஆண்டு வழங்கப்பட்டது.
இக்காணி அந்த உறுதி வழங்கியவர்களுக்கு சொந்தம் இதனை யாரும் அத்துமீறி அபகிக்க முடியாது என காணி ஆணையாளர் தெரிவித்து இதற்கு இக் காணிகளை அபகரித்தவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் உடனடியாக வழக்கு தொடர்ந்து தீர்வு பெற்றக் கொள்ளுமாறு தெரிவித்ததையடுத்து இந்த இரு காணி பிரச்சனைகளுக்கும் நீதிமன்றத்தின் ஊடாக வழக்கு தொடர்ந்து தீர்வு காணுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஏழை மக்கள் வழக்கு தொடர்வதற்கான ஏனைய உதவிகளை சுமணரட்ன தேரர் செய்வதாக உறுதியளித்து கூட்டம் முடிவுற்றது.






.jpg)
.jpg)

.jpg)



