
(பாறுக் ஷிஹான்)
வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரனின் உரைகளின் தொகுப்பான 'நீதியரசர் பேசுகிறார்' நூல் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று மு.ப. 9.30 மணிக்கு ஆரம்பமானது.
நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன், யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இ.ஆர்னொல்ட், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் பங்கேற்றுள்ளனர்.
இந் நிகழ்வில் நீண்டகால இடைவெளிக்கு பின்னர் தமிழ்த் தேசிய அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கலந்துகொண்டதன் மூலம் இச் சந்திப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கியத்துவம் மிக்கதொன்றாகும்.
வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், பதவிக்கு வந்த பின், ஆற்றிய உரைகளின் தொகுப்பு 'நீதியரசர் பேசுகிறார்' என்ற நூலாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த வெளியீட்டு நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசின் சட்ட ஆலோசகராக கடமையாற்றியவரும் சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியருமான முத்துக்குமாரசாமி சுவர்ணராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.


























.jpg)