
(கதிரவன் )
சேனையூர் வி.நவரெத்திராஜா எழுதிய 'பூத்தது தமிழ்' கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா சனிக்கிழமை 2018.08.25 திருகோணமலை குளக்கோட்டம் மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் கலந்து கொண்டு வெளியீட்டினைத் தொடக்கி வைத்தார்.
நீங்களும் எழுதலாம் கவிதை இதழ் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சேனையூர் நாகம்மாள் ஆலய குரு கலாபூசனம் அ.அரசரெத்தினம் வழங்கினார். வரவேற்புரையினை செல்வி ந.நவஜீவனாவும், அறிமுக உரையினை இலிங்கநகர் கோணலிங்கம் மகா வித்தியாலய அதிபர் எஸ்.ஜனகன் ஆற்றினர். நயவுரையினை சேனையூர் மத்திய கல்லூரியின் முந்நாள் அதிபர் இரா.இரத்தினசிங்கம் வழங்கினார். இசை ஆசிரியை திருமதி வி.பத்மராஜினி இசை விருந்தளித்தார். பொலி சஞ்சிகை ஆசிரியர் ப.ஜெயாகரன் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.
இதன்போது இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு பெற்ற திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன், கட்டைறிச்சான் கலைவாணி இசைக்குழ ஸ்தாபகர் கலாபூசனம் செல்வநாயகம் (1950ம் வருடம் தோற்றுவிக்கப்பட்டது), நீங்களும் எழுதலாம் கவிதை இதழாசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்த்தால் பொன்னாடை அணிவித்து நூலாசிரியர் வி.நவரெத்தினராஜா அவர்களால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.





















.jpg)