
வடக்கு , கிழக்கு மாகாணங்களில் கடந்த இரு வருடங்களாக கனடாத் தமிழர் அறக்கட்டளை நிதியமானது (CTCT) பல்வேறு சமூக நலன் திட்டங்களை மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத்தின் (EDS) ஊடாக செய்து வருகின்றது.
ஆரம்ப பிரிவு மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரித்தல் , ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கான தரவிருத்தி செயலமர்வு , யுத்த பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி , க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான விசேட செயலமர்வுகள் , விஞ்ஞான ஆசான் எனும் பெயரில் இறுவட்டு வெளியீடுகள் , சமூக அமைப்புக்களின் பௌதிக அபிவிருத்திக்கான நிதி உதவிகள் மற்றும் மர நடுகை செயற்றிட்டங்கள் என்பன குறிப்பிடத்தக்கவைகள் ஆகும்.
கடந்த வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த பருவமழை காரணமாக மாவட்டத்தின் பெரும்பகுதி கடும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானது. உள்நாட்டு யுத்தத்தினாலும் வறுமையினாலும் பாதிப்புக்குள்ளான வாகரைப் பிரதேச பகுதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஏறத்தாழ 1700 குடும்பங்கள் பல நலன்புரி முகாம்களில் தங்கியிருக்க வைக்கப்பட்டனர். இத்தகைய குடும்பங்களில் கர்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களைக் கொண்ட 125 குடும்பங்களுக்கு நிறை உணவுப் பொதிகளை கனடாத் தமிழர் அறக்கட்டளை நிதியம் இன்று (22.11.2018) வழங்கி வைத்தது. மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களின் ஆலோசனைக்கு அமையவும், வாகரைப் பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலுடன் EDS அமைப்பு இதனை நடைமுறைப்படுத்தியது.






























.jpg)
.jpg)

.jpg)



