கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் தரம் 5 மாணவர்களுக்கான பயிற்சிப் பரீட்சை



கல்வி, கலை, பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியத்தால் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் தரம் 5 மாணவர்களுக்கான பயிற்சிப் பரீட்சை 2019.06.16 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

கல்லடி, தாழங்குடா, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் நடைபெற்ற பரீட்சையில் மேற்படி பிரதேச மாணவர்கள் பலர் பங்குபற்றினர். கனடாவில் வதியும் கந்தையா புருசோத்மன், மாணிக்கம் இராசரத்தினம், பாக்கியராஜா கமலநாதன், G.N.M Promo.com (Gunam) ஆகியோரால் இதற்கான நிதியுதவி வழங்கப்படுகின்றது. வார இறுதி நாட்களில் வகுப்புக்களுடன், மாதாந்த பரீட்சையும் தொடர்ந்து நடைபெறுகின்றது. இதன் மூலம் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.