
க.பொ.த (உ/த) 2019 பரீட்சைக்குத் தோற்றவுள்ள திருக்கோவில் , அக்கரைப்பற்று, காரைதீவு, ராணமடு பிரதேச மாணவர்களுக்கு தொழில்நுட்ப பாடக் கருத்தரங்கு இன்று 16-07-2019 அக்கரைபற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் ஆரம்பமானது. கனடாத் தமிழர் அறக்கட்டளை நிதியத்தின் (CTCT) நிதி அனுசரணையுடன் நடைபெறும் மூன்று நாள் கருத்தரங்கை மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS) அமுல்படுத்துகின்றது.
இன்றைய இக் கருத்தரங்கிற்கு வட மாகாணத்திலிருந்து ஆறு வளவாளர்கள் பங்குகொள்கின்றனர். இன்று நடைபெற்ற விஞ்ஞானத்திற்கான தொழில்நுட்ப கருத்தரங்கிற்கு அக்கரைபற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் இருந்து 49 மாணவர்களும், தம்பிலுவில் மத்திய கல்லூரியில் இருந்து 26 மாணவர்களும், காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இருந்து 15 மாணவர்களும், ராணமடு இந்துக் கல்லூரியில் 9 மாணவர்களுமாக மொத்தம் 99 பேர் பங்குபற்றினர்.
அக்கரைபற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி அதிபர் தனது ஆரம்ப உரையில் " தமது பாடசாலையில் தொழில்நுட்ப பாடங்களைக் கற்பிக்க போதிய ஆசிரிய வளமற்ற சூழ்நிலையில் இன்றைய இக்கருத்தரங்கு மாணவர்களுக்கு மிகப் பயனுடையதாக இருக்கும் என்றார். இவரைத் தொடர்ந்து மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத் (EDS) தலைவர் சி.தேவசிங்கன் அவர்கள் தனது உரையில் கனடாத் தமிழர் அறக்கட்டளை நிதியத்தால் கடந்த நான்கு ஆண்டுகளாக வடக்கு கிழக்கு மாணவர்களுக்காக மேற்கொண்டுவரும் கல்வி மற்றும் சமூகப் பணிகள் தொடர்பாக எடுத்துக் கூறினார்.


































.jpg)
.jpg)

.jpg)



