மட்டக்களப்பு மாநகர சபையில் நாங்கள் பதவியேற்ற காலத்திலிருந்து பலதரப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் நடைபெற்றிருந்தாலும் இந்த புதிய தனியார் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டமையானது பெரியதொரு அபிவிருத்தி செயற்பாடாகவே நான் கருதுகிறேன். இந்த அபிவிருத்திச் செயற்பாட்டிற்கு நிதி வழங்கிய பிரதமர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
யுத்த காலத்தில் எமது வடக்கு கிழக்கு மாகாணமே மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டது. அதிகளவு உயிரிழப்புகள் சொத்து இழப்புகள் என ஏராளமான இழப்புகளை நாம் அனுபவித்திருக்கின்றோம். நிலைமை இவ்வாறு இருக்கும்போது வளப் பங்கீடானது சரியான முறையில் நடைபெறுகிறதா எனப் பார்த்தால் அது அவ்வாறு இல்லை. இதற்குக் காரணம் யார்?
அண்மையில் ஜனாதிபதி மட்டக்களப்பு வரும்பொழுது அவரது திட்டம் தொடர்பான அபிவிருத்தி செயற்பாட்டினை மீளாய்வு செய்யவும் கள விஜயம் செய்யவும் ஏற்பாடாகி இருந்தது. அந்த வேளையில் மாநகர சபை நிதியைக் கொண்டு மாநகர சபைக்கு சொந்தமான வீதியினை அமைத்துத் தருமாறு பணிக்கப்பட்டது. நான் அதை நிராகரித்தேன். இதற்கான நிதியினை அமைச்சு வழங்கினால் குறித்த வீதியினை அமைத்துத் தரலாம் என கூறிவிட்டேன். ஆனால் அந்த நிதியைக்கூட அமைச்சினால் வழங்க முடியாமல் போனது. மாகாண சபை மூலம் கிடைக்கப்பெற்ற ஒரு குறிப்பிட்ட தொகையுடன் மாநகர வளப்பங்கீட்டின் மூலம் அந்த வீதி அமைக்கப்பட்டது.
அண்மையில் வட மாகாணத்திலும் இதே திட்டம் அமுலாக்கப்பட்டது. ஆனால் அந்தத் திட்டத்திற்கு அங்கே ஒதுக்கப்பட்ட நிதியின் அளவினை இங்கு வழங்கப்பட நிதியுடன் ஒப்பிடும்போது பாரிய வேறுபாடு உள்ளது. இவ்வாறு குறிப்பிடுவதனால் இவ்விரு மாவட்டத்திற்கும் அபிவிருத்தி செயற்பாடு எதனையும் செய்யவேண்டாமென நான் சொல்வதாக எண்ணவேண்டாம். மாறாக ஏனைய இடங்களைப் போல எமது மட்டக்களப்பு மாவட்டத்திலும் குறிப்பாக தமிழ் சமூகம் சார்ந்த பகுதிகளிலும் நிதி ஒதுக்கீடுகளை செய்து பாரிய அபிவிருத்தி செயற்பாடுகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
சில அமைச்சர்கள் ஒரு இனம் சார்ந்தே செயற்படுகின்றனர். குறிப்பாக, நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீடு முழுக்க முழுக்க ஒரு இனம் சார்ந்ததாகவே இருக்கின்றது. எம்மால் பல முறை கோரிக்கை விடுக்கப்பட்ட பின்னரும் கூட, தமிழ் பிரதேசங்களுக்கு நகர திட்டமிடல் அமைச்சிலிருந்து நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வது மிகவும் கடினமான விடயமாகவே காணப்படுகின்றது.

வேலைவாய்ப்பு விடயத்திலும் எங்களது மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான பொலநறுவையிலிருந்து வைத்தியசாலை தொழிலாளர் வேலைக்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர். இதற்கு யார் காரணம்? இங்கே பாரிய அளவிலான வேலையில்லாப் பிரச்சனை இருக்கும்போது பொலநறுவையில் இருந்து வைத்தியசாலை தொழிலாளர் வேலைக்காக பலர் நியமிக்கப்பட்டிருப்பது எவ்வாறு நியாயமாகும்.
இதுவும் ஒரு வகையில் மனித உரிமை மீறல்தான். இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்களிடம் கேட்கும்போது நொண்டி சாட்டுக்களே பதிலாக கிடைக்கின்றன. எனது பார்வையில் இந்த நிமனங்கள் யார் செய்தது என்பது முக்கியம் இல்லை. மாறாக இந்த நியமனம் எல்லாமே முறையற்ற நியமனங்கள் எனவே அவை அனைத்தும் இரத்துச் செய்யப்பட வேண்டும் அல்லது அந்த நியமனத்திற்கு உரியவர்கள் மாற்றப்பட்டு ஏற்படும் வெற்றிடத்துக்கு மட்டக்களப்பில் வாழ்கின்ற மக்கள் உள்வாங்கப்பட வேண்டும்.
அண்மையில் பல்கலைக் கழகங்களுக்கு நியமனத்திற்கு சிபாரிசுகள் அனுப்பப்பட்டன. அதில் 90% ஆனவர்கள் குறிப்பிட்ட ஒரு சமூகம் சார்ந்த நபர்களாகவே இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவதும் எமது சமூகம் தான்.
ஒட்டுமொத்தமாக கிழக்கு மாகாணத்தை எடுத்து நோக்கினால் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் அவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்ததாகவே வழங்கப்பட்டிருக்கின்றது. வேலைவாய்ப்பும் ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்தார்தாகவே இருக்கிறது. நாங்கள் நல்லெண்ணம், நல்லிணக்கம் என்று மௌனமாக இருக்கிறோம். ஆனால் இதனால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பது பாதிக்கப்படப்போவது எமது தமிழ் சமூகம்தான்.
கடந்த முறை பிரதமர் இங்கு வந்தபோது நான் ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தேன். அது தொடர்பாக பிரதமரும் உரிய அமைச்சிற்கு பணிப்புரை வழங்கி இருந்தார். அந்த கோரிக்கை கடிதம் பல அமைச்சுக்களுக்கு கைமாறி இறுதியில் நாங்கள் கோரிக்கை விடுத்த இயந்திரம் இல்லை என்று எனக்கு பதில் வந்தது. இங்கே இவ்வாறுதான் நடக்கின்றது. நேர்மையாக நடக்க வேண்டுமென நினைத்தாலும் இங்கேயுள்ள நிர்வாக முறை அதற்கு இடம் கொடுப்பதில்லை. எனவே ஒரு வெளிப்படைத்தன்மையான நிதிப்பங்கீட்டை, வேலை வாய்ப்பு பங்கீட்டை வழங்கக்கூடிய பொறிமுறையினை அமுல்படுத்துங்கள். அதற்கு நாங்கள் உங்களுடன் துணை நிற்போமென இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
யாழ் மாநகர சபைக்கு புதிய கட்டிடம் அமைக்க அண்மையில் பல மில்லியன் ரூபாய் நிதி வழங்கி இருந்தீங்கள். எமது மாநகர சபையினுடைய கட்டிடமும் 80 வருடம் பழமையானது. எனவே எமது மாநகர சபைக்கும் எம்மால் கோரப்பட்ட நிதி ஒதுக்கீட்டை வழங்க ஆவண செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கூறி வழங்கிய சந்தர்ப்பத்துக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன் எனத் தெரிவித்தார்

.jpg)
.jpeg)