ஐயங்கேணி பாரதி முன்பள்ளிப் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் சிடாஸ் கனடா - மட்டக்களப்பு அமைப்பினால் வழங்கி வைப்பு
(சித்தா)
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட அதிகஷ்டப் பிரதேசமான ஐயங்கேணி பாரதிபுரம் பாரதி முன்பள்ளியைச் சேர்ந்த 50 பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் போசாக்குணவு தயாரிப்பதற்கான சமையல் பாத்திரங்கள் போன்றன சிடாஸ் கனடா - மட்டக்களப்பு அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு வலயத்தின் முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. எம்.புவிராஜா, ஏறாவூர் பற்று பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப்.எம்.எம். சர்ஜுன், ஐயங்கேணி பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.எஸ்.சசிதரன் ஆகியோர் வருகைதந்திருந்ததுடன் குறித்த பிள்ளைகளும் அவர்களது பெற்றோர்களும், முன்பள்ளி ஆசிரியர்களும் சமூகமளித்திருந்தனர்.
மேலும் சிடாஸ் மட்டக்களப்பு அமைப்பின் தலைவர் திரு.க.பாஸ்கரன், செயலாளர் திரு.அ.சுகுமாரன் பொருளாளர் திரு.ஜோ.சகாயநாதன், உப செயலாளர் திரு.எஸ்.வீ சுவேந்திரன் ஆகியோரும் ஐயங்கேணி பாரதிபுரம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், பொருளாளர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஐயங்கேணி பாரதிபுரம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் இதற்கான கோரிக்கை சிடாஸ் அமைப்பிற்கு முன்வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.














.jpg)
.jpg)

.jpg)



