நேற்று செவ்வாய்க்கிழமை (06) அவரது வர்த்தக நிலையத்தில் வைத்து இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் பாவனையாளர்கள் வர்த்தக நிலையத்தை கொள்ளையடிக்க வந்த நிலையில் அதனை கடை உரிமையாளர் தடுத்த போது கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் திருமணமாகாத நிலையில் சில்லறைக் கடை நடாத்தி வந்த 45 வயதுடையவரே தலைப் பகுதியில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்து சட்டநடவடிக்கை மேற்கொள்ள ஏறாவூர் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.