10 ஆயிரம் மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 42 வயதுடைய பெண் ஒருவர் நேற்றிரவு (22) ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்றிரவு 10 ஆயிரம் மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





.jpg)




.jpeg)

