பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வாவின் தலைமையில் அண்மையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் இது பற்றி ஆராயப்பட்டது.
இதற்கமைய உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை மதுவரித் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் ஒவ்வொரு நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்த விளக்கத்தை முன்வைத்தனர்.
அத்துடன், அரசாங்க பொதுப்படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி குழுவில் கலந்துகொண்ட அதிகாரிகள், 2026-2030 ஆண்டு காலப்பகுதிக்கான இடைக்கால படுகடன் முகாமைத்துத்துக்கான வழிகாட்டல் மற்றும் 2026-2030 ஆண்டு காலப்பகுதிக்கான படுகடன் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
இலங்கை முதலீட்டுச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் தமது நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர்.
நேரடியான வெளிநாட்டு முதலீடு குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 827 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வெளிநாட்டு முதலீடுகளாகப் பெறப்பட்டுள்ளது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அதன்படி, எதிர்வரும் ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீடு தொடர்ந்து மேம்படுவதை உறுதி செய்ய இலங்கை முதலீட்டுச் சபையும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குழு வலியுறுத்தியது.
அத்துடன், 2024ஆம் ஆண்டு 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டிய 8 அறிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





.jpg)




.jpeg)

