
மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ், நேற்று (22) பிற்பகல் பமுனுகம மற்றும் துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட கடலோரப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் மற்றும் 04 படகுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
பமுனுகம பொலிஸார் 1500 கிலோகிராம் பீடி இலைகளுடன் 02 படகுகளை கைப்பற்றியுள்ளதுடன், துங்கல்பிட்டிய பொலிஸாரால் சுமார் 600 கிலோகிராம் பீடி இலைகளுடன் 02 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சோதனை நடவடிக்கைகளின்போது பல சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். சந்தேகநபர்கள் தொடர்பில் துங்கல்பிட்டிய மற்றும் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




.jpg)




.jpeg)

