மண்முனை மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - சந்தேகநபர்கள் தப்பியோட்டம் !


மண்முனை மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட உன்னிச்சை, கரவட்டியாறு என்னுமிடத்தில் சட்டவிரோதமாகக் கசிப்பு காய்ச்சுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மண்முனை மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஆயித்தியமலைப் பொலீசார் இணைந்து சோதனை நடத்தினர்.

 எனினும், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். மேலும், அங்கு இரண்டு பரல்கள் மற்றும் 400 லீட்டர் கோடா கைப்பற்றப்பட்டு அவ்விடத்திலேயே அழிக்கப்பட்டது .