கடந்த 24 மணித்தியாலங்களில் நீரில் மூழ்கி ஐவர் உயிரிழப்பு!


கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில் நீரில் மூழ்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெக்கிராவ மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கெக்கிராவ, சமகிகம பகுதியில் உள்ள கைவிடப்பட்ட ஏரி ஒன்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 41 வயதுடைய இரு சகோதரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தெல்தெனிய - விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்று நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

நான்கு இளைஞர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) பிற்பகல் தெல்தெனிய, பம்பரவல விகாரைக்கு அருகிலுள்ள பகுதியில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றிருந்த போதே, அவர்களில் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

அவர்களில் இரு இளைஞர்களின் சடலங்கள் சம்பவ இடத்திலேயே கண்டெடுக்கப்பட்ட நிலையில், காணாமல் போயிருந்த மற்றைய இளைஞனின் சடலம் பின்னர் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.