முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து : 3 மாதக் குழந்தை உயிரிழப்பு!


 நிட்டம்புவ - ருவன்வெல்ல வீதியின் கோனகல பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை (21) பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின்போது வாகனத்தின் பின்இருக்கையில் பயணித்த பெண்ணும், அவரது குழந்தையும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி 3 மாதமேயான பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தை கோனகல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.