புதையல் தோண்டிய 7 பேர் கைது


மஹவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாப்பஹுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய 07 சந்தேக நபர்கள் மஹவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை (18) இரவு மஹவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள் 17 முதல் 51 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் மகுல்பொத்த, மஹவ, ரிதீபெந்திஎல்ல மற்றும் பலல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மஹவ பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.