தேசிய இராணுவ வீரர் வெற்றி விழா நிகழ்வில் பங்கேற்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இதுவரை எந்தவொரு அழைப்பும் கிடைக்கவில்லை என அவரது ஊடகச் செயலாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு அமைச்சர் உபாலி பன்னிலகே அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது.
பொதுமக்களை திசைதிருப்பும் வகையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெற்றி விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். வழக்கமாக ஜனாதிபதி செயலகம் அல்லது பாதுகாப்பு அமைச்சிடமிருந்தே இந்த வெற்றி விழாவிற்கான உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படும் என மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.


.jpg)







.jpeg)


