நிக்கபொத்த சந்திரஜோதி மகாநாயக்க தேரர் மகா விஹாரவங்சிக உடரட்ட அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்கராக பதவியேற்பு..


 மகா விஹாரவங்சிக உடரட்ட அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்கராகப் பதவியேற்ற, கோட்டே மாதிவெல ஸ்ரீ ஞானானந்த பௌத்த மையம் மற்றும் ஹபுத்தலை நிக்கபொத்த சுபத்ராராம பிரிவெனா மகா விஹாரை உள்ளிட்ட விஹாரைகளின் அதிபதி, ஸ்ரீ ரதனஜோதி வங்சாலங்கார சத்தர்மவாகீஸ்வர சாஸ்திர விசாரத பண்டித மஹோபாத்தியாய அதிவணக்கத்துக்குரிய நிக்கபொத்த சந்திரஜோதி மகாநாயக்க தேரரை வரவேற்றல் மற்றும் சன்னஸ் பத்திரம் கையளித்தலுக்கான அரச விழா, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் ஞாயிற்றுக்கிழமை (17) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மகா விஹாரவங்சிக ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிகாயவின் உன்னத மகாநாயக்க அதிவணக்கத்துக்குரிய கரகொட உயன்கொட மைத்ரிமூர்த்தி மகாநாயக்க தேரரின் தலைமையில் நடைபெற்ற இந்த புண்ணிய மஹோற்சவத்தில், மகா விஹாரவங்சிக உடரட்ட அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க பதவிக்கான 'ஸ்ரீ சன்னஸ்' பத்திரத்தினைப் பிரதமர் அதிவணக்கத்துக்குரிய நிக்கபொத்த சந்திரஜோதி மகாநாயக்க தேரரிடம் கையளித்தார்.

முப்பிரிவுகளினதும் மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல உள்ளிட்ட அமைச்சர்கள், பௌத்த விவகாரங்கள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.