வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட நபரை "குற்றவாளி" என அறிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி கருவுற்றமை தெரியவந்ததைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியதுடன், 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்தேகநபருக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர், 2023 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சந்தேகநபர் தலைமறைவாகியிருந்ததையடுத்து, அவர் முன்னிலையாகாத நிலையிலேயே வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணி ஸ்ரீ சிவஸ்கந்தஸ்ரீயினால் முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் முடிவில், குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை, ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றச்செயலின் போது சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் பாதிப்புகள், அவர் கருவுற்றமை, குற்றவாளி விசாரணைகளிலிருந்து தலைமறைவாகியிருந்தமை மற்றும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவரே குற்றத்தை புரிந்தமை ஆகியவை அதிகபட்ச தண்டனை விதிக்க முக்கிய காரணிகளாக அமைந்ததாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.










.jpg)


.jpg)
