கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு தோணியில் 150 லீற்றர் கசிப்பு கடத்திய ஒருவர் கைது


 கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு காஞ்சிரம்குடா வாவி ஊடாக மீன்பிடி தோணியில் கசிப்பு கடத்தி சென்று ஒருவரை 150 லீற்றர் கசிப்புடன் வெள்ளிக்கிழமை (10) அதிகாலையில் கஞ்சரம்குடாவில் வைத்து 60 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வேனுஜன் தலைமையில் பொலிஸ் கொஸ்தாப்பரகளான யசோதரன், ஹேமச்சந்திர மற்றும் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (10) அதிகாலை 4 மணிக்கு குறித்த வாவியை முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்

இதன்போது தோணியில் கலன்களில் எடுத்துச் செல்ல முற்பட்ட 150 லீற்றர் கசிப்புடன் 60 வயதுடைய ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய மீன்பிடி தோணி ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.